தர்மபுரி நகராட்சி பேரூராட்சிகளில் போட்டியிட 36 பேர் வேட்புமனு தாக்கல்


தர்மபுரி நகராட்சி பேரூராட்சிகளில் போட்டியிட  36 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 31 Jan 2022 4:54 PM GMT (Updated: 2022-01-31T22:24:51+05:30)

தர்மபுரி நகராட்சி பேரூராட்சிகளில் போட்டியிட 36 பேர் வேட்பு மனுக்கள் செய்தனர்.

தர்மபுரி:
தர்மபுரி நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிட 36 பேர் வேட்பு மனுக்கள் செய்தனர்.
தேர்தல்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளுக்கு வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தர்மபுரி நகராட்சி அலுவலகம் மற்றும் 10 பேரூராட்சி அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. 
இந்தநிலையில் நேற்று 3-வது நாளாக வேட்பு மனுக்கள் தாக்கல் நடந்தது. தர்மபுரி நகராட்சி பகுதியில் தேர்தலில் போட்டியிட 8 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பேரூராட்சிகளில் போட்டியிட அரூரில் 9 பேரும், கம்பைநல்லூரில் 5 பேரும், பாப்பாரப்பட்டியில் 9 பேரும், பென்னாகரத்தில் 2 பேரும், காரிமங்கலம், மாரண்டஅள்ளி, பாலக்கோடு ஆகிய பேரூராட்சி பகுதிகளில் தலா ஒருவரும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். 
இதுவரை 37 பேர் மனு தாக்கல்
இதன்படி தர்மபுரி நகராட்சி மற்றும் மாவட்டத்திலுள்ள பேரூராட்சி பகுதிகளில் போட்டியிட நேற்று ஒரு நாளில் 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அரூர் பேரூராட்சியில் ஏற்கனவே ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதன்படி மாவட்டத்தில் நேற்று வரை மொத்தம் 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Next Story