விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி


விபத்தில் ஆட்டோ டிரைவர் பலி
x
தினத்தந்தி 31 Jan 2022 6:07 PM GMT (Updated: 2022-01-31T23:37:27+05:30)

திருவாடானை அருகே விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியானார்.

தொண்டி,

திருவாடானை அருகே உள்ள டி.கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவருடைய மகன் சித்திரவேலு (வயது 42). இவர் நேற்று மாலை தனக்கு சொந்தமான ஆட்டோவை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கடம்பாகுடி கிராமத்தில் தொண்டி-மதுரை நெடுஞ்சாலையில் மயானம் அருகே சென்ற போது சாலை பள்ளத்தில் இவரது ஆட்டோ இறங்கியுள்ளது. இதில் நிலை தடுமாறிய நிலையில் ஆட்டோவும் எதிரே வந்த காரும் நேருக்கு நேர் மோதியது. இதில் ஆட்டோ அருகில் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஆட்டோ டிரைவர் சித்திரவேலு காருக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து காரில் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்த திருவாடானை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சித்திரவேலு உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக திருவாடானை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story