தர்ப்பூசணி விற்பனை அமோகம்


தர்ப்பூசணி விற்பனை அமோகம்
x
தினத்தந்தி 15 Feb 2022 5:21 PM GMT (Updated: 15 Feb 2022 5:21 PM GMT)

கம்பம் பகுதியில் தர்ப்பூசணி விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

கம்பம்: 

கோடை வெயில் தொடங்குவதற்கு முன்பே தேனி மாவட்டத்தில் தர்ப்பூசணி விற்பனை இந்த ஆண்டு தொடங்கி உள்ளது. அதில் கம்பம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம் ஆகிய ஊர்களுக்கு நேரடியாக சென்று விவசாயிகளிடம் இருந்து தர்ப்பூசணி கொள்முதல் செய்து வருகின்றனர். 

கம்பத்தில் உள்ள சாலையோரத்தில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. அவற்றை கூடலூர், புதுப்பட்டி, சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். மேலும் கேரள மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் கம்பத்துக்கு வந்து ஜீப் மற்றும் சரக்கு வாகனங்கள் மூலமாக தர்ப்பூசணியை வாங்கி செல்கின்றனர். இதனால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து கம்பத்தை சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு வாகன போக்குவரத்து செலவு குறைவாக இருந்ததால் தர்ப்பூசணி 1 கிலோ ரூ.15 வரை விற்பனையானது. இந்த ஆண்டு டீசல் விலை உயர்ந்ததால் லாரி வாடகை உயர்ந்துள்ளது, மேலும் தொழிலாளர்களின் கூலி அதிகரித்துள்ளதால், கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

Next Story