அம்மாபேட்டை பேரூராட்சியில் ஓட்டு போட தாமதமாக வந்த 5 கவுன்சிலர்கள் வெளியேற்றம்- ஒலகடம், நெரிஞ்சிப்பேட்டையில் போட்டி தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி


அம்மாபேட்டை பேரூராட்சியில் ஓட்டு போட தாமதமாக வந்த  5 கவுன்சிலர்கள் வெளியேற்றம்- ஒலகடம், நெரிஞ்சிப்பேட்டையில் போட்டி தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி
x
தினத்தந்தி 5 March 2022 3:27 AM IST (Updated: 5 March 2022 3:27 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை பேரூராட்சியில் ஓட்டுப்போட தாமதமாக வந்த 5 கவுன்சிலர்கள் வெளியேற்றப்பட்டனர். ஒலகடம், நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் போட்டி தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.

அம்மாபேட்டை
அம்மாபேட்டை பேரூராட்சியில் ஓட்டுப்போட தாமதமாக வந்த 5 கவுன்சிலர்கள் வெளியேற்றப்பட்டனர். ஒலகடம், நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் போட்டி தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். 
தாமதமாக வந்த கவுன்சிலர்கள்
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பேரூராட்சியில் நேற்று தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 14 தி.மு.க. கவுன்சிலர்களில் 9 கவுன்சிலர்கள் மட்டுமே வாக்குப்பதிவு அறைக்குள் ெசன்றனர். மற்ற 5 கவுன்சிலர்களும் காலை 10 மணிக்கு மேல் தாமதமாக வந்தார்கள். இதனால் தேர்தல் அதிகாரி அவர்கள் 5 பேரையும் ஓட்டுப்போட அனுமதிக்கவில்லை. 
இந்தநிலையில் உள்ளே சென்ற 3 கவுன்சிலர்கள் வாக்காளிக்காமல் புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள். அதனால் 6 பேர் வாக்களித்த நிலையில் ஒரு ஓட்டு செல்லாதவையானது. இதனால் 5 வாக்குகள் பெற்று தி.மு.க. வேட்பாளர் வெங்கடாசலம் வெற்றிபெற்றார். 
 தாமதமாக வந்த 5 கவுன்சிலர்கள் வாக்குப்பதிவு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்படாதது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
போட்டி தி.மு.க.  வேட்பாளர்கள் வெற்றி
இதேபோல் ஒலகடம் பேரூராட்சியில் வெற்றிபெற்ற 15 வார்டு கவுன்சிலர்களும் வாக்குப்பதிவில் பங்கேற்றனர். இதில் தி.மு.க. அறிவித்திருந்த தலைவர் வேட்பாளர் எம்.ஜெயக்கொடி என்பவர் 7 ஓட்டுகள் பெற்றார். தி.மு.க.விலேயே போட்டி வேட்பாளராக போட்டியிட்ட கவுன்சிலர் கே.கே.வேலுசாமி என்பவர் 8 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 
நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சியிலும் தி.மு.க. தலைவர் வேட்பாளராக 7-வது வார்டு கவுன்சிலர் என்.பி.கண்ணன் அறிவிக்கப்பட்டு இருந்தார். ஆனால் அ.தி.மு.க. கவுன்சிலர்களும் ஓட்டுப்போட்டதால் தி.மு.க. போட்டி வேட்பாளர் ராகினி என்பவர் வெற்றி பெற்றார். 
ஒலகடம், நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சிகளில் தி.மு.க. அறிவித்திருந்த வேட்பாளர்களை தோற்கடித்து போட்டி தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றிபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story