பங்குனி உத்திரத்தையொட்டி பூக்கள் விலை ‘கிடுகிடு' உயர்வு-குண்டு மல்லி கிலோ ரூ.800-க்கு விற்பனை


பங்குனி உத்திரத்தையொட்டி பூக்கள் விலை ‘கிடுகிடு உயர்வு-குண்டு மல்லி கிலோ ரூ.800-க்கு விற்பனை
x
தினத்தந்தி 18 March 2022 12:42 AM IST (Updated: 18 March 2022 12:42 AM IST)
t-max-icont-min-icon

பங்குனி உத்திரத்தையொட்டி பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. குண்டு மல்லி கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நொய்யல், 
பூ விவசாயிகள்
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் குண்டு மல்லி, முல்லை, காக்கட்டான், அரளி, சம்பங்கி, செவ்வந்தி, ரோஜா, செண்டு மல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை பயிரிட்டுள்ளனர். இந்த பூக்களை பறித்து லேசான கோணிப்பைகளில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
குண்டு மல்லி ரூ.800-க்கு விற்பனை
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி ரூ.120-க்கும், அரளி ரூ.100-க்கும், ரோஜா ரூ.120-க்கும், முல்லை ரூ.450-க்கும், காக்கட்டான் ரூ.500-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும், செண்டுமல்லி 40-க்கும் ஏலம் போனது. 
நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.800-க்கும், சம்பங்கி ரூ.230-க்கும், அரளி ரூ.250-க்கும், ரோஜா ரூ.200-க்கும், முல்லை ரூ.800-க்கும், செவ்வந்தி ரூ.250-க்கும், செண்டுமல்லி 80-க்கும் ஏலம் போனது. பங்குனி உத்திரத்தையொட்டி பூக்கள் விலை‌ கிடுகிடுவென உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Next Story