குழந்தைகள் வளர்ச்சி திட்ட பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாம்


குழந்தைகள் வளர்ச்சி திட்ட பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 27 March 2022 2:05 AM IST (Updated: 27 March 2022 2:05 AM IST)
t-max-icont-min-icon

குழந்தைகள் வளர்ச்சி திட்ட பிரதிநிதிகளுக்கான பயிற்சி முகாமினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.

விருதுநகர், 
விருதுநகரில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிக்கான தகவல் மற்றும் கருத்துப்பரிமாற்றம்மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரதிநிதிகளுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமினை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பயிற்சிகையேட்டினை வழங்கினார். இந்தநிகழ்ச்சியில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ., சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் நகரசபைத் தலைவர் மாதவன், விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 


Next Story