சிறுவன், போக்சோ சட்டத்தில் கைது


சிறுவன், போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 28 March 2022 12:02 AM IST (Updated: 28 March 2022 12:02 AM IST)
t-max-icont-min-icon

சிறுவன், போக்சோ சட்டத்தில் கைது

மயிலாடுதுறை;
தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் போலீஸ் சரகத்தை சேர்ந்த 16 வயதான பிளஸ்-1 படிக்கும் மாணவி ஒருவர் சம்பவத்தன்று பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை, 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதான சிறுவன் வழிமறித்து கையை பிடித்து இழுத்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்ததால் அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இதுகுறித்து மாணவியின்  தந்தை மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பலதா மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். பின்னர் சிறுவனை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தஞ்சை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

Next Story