நீத்தார் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி


நீத்தார் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி
x
தினத்தந்தி 14 April 2022 7:37 PM GMT (Updated: 2022-04-15T01:07:42+05:30)

நீத்தார் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுக்கோட்டை, 
தீ தொண்டு நாள் விழா புதுக்கோட்டை தீயணைப்பு மீட்புப்பணிகள் நிலையத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது மாவட்ட அலுவலர், பானுப்பிரியா தலைமையில் நீத்தார் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் மற்றும் நிலைய அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
கந்தர்வகோட்டையில் தீ தொண்டு வாரம் கடந்த 14-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தீத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தீயணைப்பு வீரர்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Next Story