வாலிபரை தாக்கிய 4 பேர் கைது


வாலிபரை தாக்கிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 17 April 2022 8:18 PM GMT (Updated: 2022-04-18T01:48:10+05:30)

நெல்லை அருகே வாலிபரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:
நெல்லை அருகே உள்ள கட்டுடையார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அருண் குமார் (வயது 25). இவர் சம்பவத்தன்று உடையார்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மேலக்கரை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35), படப்பைகுறிச்சி பகுதியை சேர்ந்த சத்திய பாபு (32), வடக்கு காருகுறிச்சி பகுதியை சேர்ந்த சிவா (26), சிவன் பெருமாள் (29) ஆகியோர் சாலையின் நடுவே நின்று பேசிக் கொண்டிருந்தனர். இதனை அருண்குமார் தட்டி கேட்டதாக தெரிகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து அருண் குமாரை சரமாரியாக தாக்கியதாகவும், அரிவாளை காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வன சுந்தர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தார்.

Next Story