சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.64 லட்சத்துக்கு ஏலம்


கரூர்
x
கரூர்

சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.64 லட்சத்துக்கு ஏலம் போனது.

நொய்யல், 
விற்பனை கூடம்
அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் சாலைப்புதூரில் செயல்பட்டுவருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய், எள் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகில் உள்ள கரூர் ஒன்றியம், க.பரமத்தி ஒன்றிய விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். 
அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தேங்காய்கள்
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 34.29 குவிண்டால் எடை கொண்ட 11  ஆயிரத்து 648 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தன. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.28.39ம், குறைந்த விலையாக ரூ.24.05-ம், சராசரி விலையாக ரூ.26.69ம் என ரூ90ஆயிரத்து 53-க்கு விற்பனை ஆனது.
அதேபோல் 176.20 குவிண்டால் எடை கொண்ட 372 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.90.25-க்கும், குறைந்த விலையாக ரூ.88.55-க்கும், சராசரி விலையாக ரூ.88.55-க்கும் மற்றும் இரண்டாம் தரம் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.87.42-க்கும், குறைந்த விலையாக ரூ.83.55-க்கும், சராசரி விலையாக ரூ.85.75க்கும் என ரூ.15 லட்சத்து 46ஆயிரத்து 592க்கு விற்பனை ஆனது.
எள்
421.12 குவிண்டால் எடை கொண்ட 563 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது. இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.124.92ம், குறைந்த விலையாக ரூ.107.40ம், சராசரி விலையாக ரூ.117.40-ம் மற்றும் சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.123.40-ம், குறைந்த விலையாக ரூ.100.39-ம், சராசரி விலையாக ரூ.116.40-ம் மற்றும் வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.109.40-க்கும், குறைந்த விலையாக ரூ 109.40-க்கும், சராசரியாக ரூ 109.40-க்கும் என ரூ.47லட்சத்து 74ஆயிரத்து 913-க்கு ஏலம் போனது,
தேங்காய், தேங்காய் பருப்பு, எள் ஆகியவை சாலைப்புதூரில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மொத்தமாக ரூ.64 லட்சத்து 11 ஆயிரத்து 558-க்கு ஏலம் போனது.







Next Story