தாயார் சன்னதியில் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர்


தாயார் சன்னதியில் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர்
x
தினத்தந்தி 20 April 2022 7:23 PM GMT (Updated: 20 April 2022 7:23 PM GMT)

தாயார் சன்னதியில் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர்

ஸ்ரீரங்கம், ஏப்.21-
கோடை வெப்பம் அதிகரித்துவருவதை யொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் சிரமம் இன்றி நடக்க அனைத்து இடங்களிலும் தரைவிரிப்பு விரிக்கப்பட்டுள்ளது. மேலும் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காக்கும் பொருட்டு தங்கக் கொடிமரம் அருகிலும், இலவச தரிசன வரிசையிலும் தினந்தோறும் சுமார் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மருத்துவ குணம் நிறைந்த மூலிகை நீர்மோர் கோவில் நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாயார் சன்னதியிலும் நேற்று முதல் பக்தர்களுக்கு மூலிகை நீர் மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர் வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி ஆணையர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story