மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
விழுப்புரத்தில் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் கிழக்கு சண்முகாபுரம் காலனி தங்கராஜ் லே-அவுட் தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகன் தனசேகர் (வயது 31). மெக்கானிக். இவருக்கும், இவருடைய தம்பி ராஜசேகர் என்கிற சின்னதனா (28) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் ராஜசேகர் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து தனசேகரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தனசேகர் தனது வீட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனசேகரின் மனைவி அன்பரசி விழுப்புரம் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story