18 பயணிகளிடம் 2½ கிலோ தங்கம்-எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 18 பயணிகளிடம் இருந்து 2½ கிலோ தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு, ஏப்.27-
திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 18 பயணிகளிடம் இருந்து 2½ கிலோ தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அப்போது சுமார் 18 பயணிகளிடம் இருந்து 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.
பயணிகளிடம் விசாரணை
மேலும் அவர்களிடம் இருந்து மடிக்கணினி, செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் ரூ.1 ேகாடிேய 25 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேற்கண்ட பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணை நிறைவுபெற்ற பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்து சரியான தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ேநற்று முன்தினம் இரவு திருச்சிக்கு ஒரு விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒரு பயணி தனது உடமைகளில் மறைத்து கடத்தி வந்த ரூ.15.87 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் ரூ.11.4 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story