5-வது அகழாய்வு குழி தோண்டும் பணி தொடக்கம்
சிவகாசி அருகே 5-வது அகழாய்வு குழி தோண்டும் பணி தொடங்கியது.
தாயில்பட்டி,
சிவகாசி அருகே 5-வது அகழாய்வு குழி தோண்டும் பணி தொடங்கியது.
அகழாய்வு பணி
சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் கடந்த 2 மாதமாக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு வகையாக அரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இங்கு 3 அகழாய்வு குழிகள் மட்டும் 12 அடி ஆழம் தோண்டப்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிதாக 4 மற்றும் 5-வது அகழாய்வு குழிகள் தோண்டும் பணி தொடங்கியது.
சங்கு வளையல்கள்
அகழாய்வில் தோண்டும் பணியில் சங்கு வளையல்கள், கண்ணாடியால் செய்யப்பட்ட ஏராளமான பாசிமணிகள், மற்றும் பெண்கள் நொண்டி விளையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சில்லு வட்டுகள் மற்றும் ஆட்டக்காய்கள், பானை ஓடுகள் ஏராளமாக கிடைத்தன.
தற்போது அகழாய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் பல அரிய பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story