கடைகளில் தடை செய்யப்பட்ட மிட்டாய்கள் விற்கப்படுகிறதா?
அருப்புக்கோட்டையில் கடைகளில் தடை செய்யப்பட்ட மிட்டாய்கள் விற்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் கடைகளில் தடை செய்யப்பட்ட மிட்டாய்கள் விற்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி அண்மையில் கடைகளில் சிகரெட் வடிவ மிட்டாய் மற்றும் ஊசி வடிவிலான மிட்டாய் விற்பனை செய்வதற்கு தடை விதித்திருந்தார். இந்தநிலையில் அருப்புக்கோட்டை பஜார் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட சிகரெட் வடிவ மிட்டாய் மற்றும் ஊசி வடிவிலான மிட்டாய் விற்பனை செய்யப்படுகிறதா? என சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது தடைசெய்யப்பட்ட பீடி உள்ளிட்ட புகையிலைப்பொருட்கள், மூக்குப்பொடி விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
மேலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய கடைகள், காலாவதி தேதி குறிப்பிடாமல் உணவுப் பொருட்கள் விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம்
அதேபோல உணவு பொருட்களை பாதுகாப்பாக மூடி வைக்காத பேக்கரிகள் மற்றும் முக கவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கும் அபராதம் விதித்தனர்.
மொத்தம் ரூ.2,100 அபராதமாக வசூலித்தனர். இந்த ஆய்வில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனரின்தொழில்நுட்ப பிரிவு தனி உதவியாளர் செல்வராஜ் தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், ராஜபாண்டியன், ஐயப்பன் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story