தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவர் பலி


தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவர் பலி
x
தினத்தந்தி 29 April 2022 8:42 PM GMT (Updated: 2022-04-30T02:12:57+05:30)

ஆத்தூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆத்தூர்:-
ஆத்தூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பள்ளி மாணவர்
ஆத்தூர் அருகே உள்ள அப்பம்மசமுத்திரம் ஊராட்சி பனமரத்துப்பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அம்மையப்பன். இவர் கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் வேலை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவருடைய மனைவி நித்யா. இவர்களது மகன் சந்திர மதியழகன் (வயது 15). பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர்களது வீட்டின் தரைத்தளத்தில் தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த நிலையில் நேற்று காலை எழுந்து நடந்து சென்ற சந்திர மதியழகன் எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். இதைப்பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரணை
தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சந்திர மதியழகன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.
இது குறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

Next Story