சேலத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


சேலத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 April 2022 8:53 PM GMT (Updated: 2022-04-30T02:23:38+05:30)

சேலத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சேலம்:-
ஆசிரியர்களுக்கு என்று தனியாக பணி பாதுகாப்பு சட்டம் ஏற்படுத்த வேண்டும், கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாத ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி சேலத்தில் நேற்று மாலை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலாளர் மீனா, மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட பொருளாளர் தமிழரசன், மாவட்ட அமைப்பு செயலாளர் கந்தசாமி உள்பட ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story