தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான செய்திகள் வருமாறு:-
ஆபத்தான பள்ளம்
நாகை பழைய பஸ் நிலையம் அருகே மறைமலை அடிகள் சிலை பாதாள சாக்கடை பள்ளம் திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் பாதாள சாக்கடை பள்ளத்தினால் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் திறந்த நிலையில் உள்ள பாதாள சாக்கடை பள்ளத்தை மூட நடவடிக்கை எடுப்பார்களா?
-முத்தையன், நாகப்பட்டினம்.
பூங்கா சீரமைக்கப்படுமா?
நாகை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எதிரே தாமரைகுளம் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா திறக்கப்பட்டும் முழுமையாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. மேலும், பூங்காவை சிலர் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதி ழுழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பூங்காவுக்கு வருபவர்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பூங்காவை முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும், சீரமைக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?
-மணி, நாகப்பட்டினம்.
Related Tags :
Next Story