மண் கடத்திய லாரி பறிமுதல்


மண் கடத்திய லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 30 April 2022 10:56 PM IST (Updated: 30 April 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே மண் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு அதிகாரிகள் கிருஷ்ணகிரி சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற ஒரு டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில் மண் கடத்தியது தெரிய வந்தது. இது குறித்து அதிகாரி பொன்னுமணி கொடுத்த புகாரின் பேரில் குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story