ஏரியூர் அருகே அடுத்தடுத்து 3 கோவில்களில் திருட்டு


ஏரியூர் அருகே அடுத்தடுத்து 3 கோவில்களில் திருட்டு
x
தினத்தந்தி 30 April 2022 10:58 PM IST (Updated: 30 April 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

ஏரியூர் அருகே அடுத்தடுத்து 3 கோவில்களில் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரியூர்:
ஏரியூர் அருகே உள்ள பட்டக்காரன் கொட்டாயில் அய்யனாரப்பன்,  கருப்பசாமி, சந்தப்பேட்டையில் முத்துமாரியம்மன் ஆகிய கோவில் உள்ளன. நேற்று காலை கிராமமக்கள் கோவில்களுக்கு சென்றனர். அப்போது 3 கோவில்களின் பூட்டு உடைக்கப்பட்டு பூஜை சாமான்கள், உண்டியல் பணம், அம்மன் கழுத்தில் இருந்த தாலி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கிராமமக்கள் ஏரியூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில்  போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில்களில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story