சிறுமி கற்பழித்து கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதிகள் 2 பேர் கல்வியை தொடரலாம்- ஐகோர்ட்டு அனுமதி
கோபர்டியில் சிறுமி கற்பழித்து கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 கைதிகள் கல்வியை தொடர ஐகோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.
மும்பை,
கோபர்டியில் சிறுமி கற்பழித்து கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 2 கைதிகள் கல்வியை தொடர ஐகோர்ட்டு அனுமதி அளித்து உள்ளது.
தூக்கு தண்டனை கைதிகள்
அகமது நகர் கர்ஜத் தாலுகாவில் உள்ள கோபர்டி கிராமத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ந் தேதி, 14 வயது சிறுமியை 3 பேர் சேர்ந்து கடத்தி கற்பழித்து கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கில் கைதான ஜித்தேந்திர பாபுலால் ஷிண்டே (வயது21), சந்தோஷ் பவல் (29), நிதின் (28) ஆகியோருக்கு மாவட்ட செசன்சு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
அவர்கள் தங்களது தண்டனையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மேல் முறையீடு மனு செய்தனர். இந்த மனு மீதான விசாரணை அவுரங்காபாத் ஐகோர்ட்டு கிளைக்கு மாற்றப்பட்டது.
கல்வியை தொடர அனுமதி
தற்போது புனே ஏரவாடா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தூக்கு தண்டனை கைதிளில் ஜித்தேந்திர பாபுலால் ஷிண்டே, நிதின் ஆகிய 2 பேரும் திறந்த வெளி பல்கழைக்கழகத்தில் கல்வியை தொடர விரும்புவதாக தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக கடந்த 3-ந் தேதி ஏரவாடா சிறை சூப்பிரண்டு அங்குள்ள யஷ்வந்த்ராவ் சவான் மற்றும் இந்திராகாந்தி ஆகிய பல்கலைக்கழக பாடங்களின் பட்டியலை ஐகோர்ட்டில் அளித்து இருந்தார்.
இந்த கோரிக்கை மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், மனுதாரர்கள் திறந்தவெளி பல்கழைக்கழகத்தில் கல்வியை தொடர விருப்பம் தெரிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. அவர்களின் விருப்பத்திற்கு மனிதாபிமான முறையில் சிறை அதிகாரிகள் தேவையான உதவிகள் வழங்குவதை அனுமதிப்பதாக உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story