மும்பையில் மின் வெட்டு ஏன்?- பெஸ்ட் நிறுவனம் விளக்கம்
மும்பையில் மின் வெட்டு ஏன்? என்பதற்கு பெஸ்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மும்பை,
மும்பையில் மின் வெட்டு ஏன்? என்பதற்கு பெஸ்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
வெப்பம் அதிகம்
மராட்டியம் உள்பட நாடு முழுவதும் வெயில் காலத்தை முன்னிட்டு கடும் வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல பகுதிகளில் பகல் வெப்பநிலை இயல்பை விட சுமார் 5 டிகிரி செல்சியஸ் அதிகமான உள்ளது.
இந்த நிலையில் மராட்டிய தலைநகரமான மும்பை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் வெட்டு பிரச்சினையும் நிலவி வருகிறது. குறிப்பாக தெற்கு மும்பையில் உள்ள பிரபாதேவி மற்றும் மும்பா தேவி பகுதிகளில் மாலை நேரங்களில் மின் வெட்டு ஏற்பட்டது.
இதேபோல இந்த வார தொடக்கத்தில் மும்பையின் பல பகுதிகளில் மின்சார லைன்களை சேதமடைந்ததால் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக மின்வெட்டு ஏற்பட்டது.
மும்பை பெருநகரத்திற்கு பெஸ்ட் நிறுவனமும் மின் வினியோகம் செய்து நிலையில், மின்வெட்டு குறித்து அதன் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-
நுகர்வு அதிகரிப்பு
மும்பையில் வெப்பநிலை கடுமையாக அதிகரித்திருப்பதன் காரணமாக மக்கள் அதில் இருந்து தப்பிக்க வீட்டில் ஏ.சி.கள் மற்றும் மின் விசிறிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் விளைவாக மின்சாரத்திற்கு அதிக தேவை அதிகரித்துள்ளதால், திடீரென நுகர்வு அதிகரிக்கிறது.
இதன்காரணமாக மின்சார நெட்வொர்க்கில் ஏற்படும் கோளாறுகள் மின்வெட்டுக்கு வழி வகுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story