கிணற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி


கிணற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 7 May 2022 2:07 AM IST (Updated: 7 May 2022 2:07 AM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி

உப்பிலியபுரம், மே.7-
உப்பிலியபுரத்தை அடுத்த பச்சபெருமாள்பட்டி ஊராட்சி தங்கநகரைச் சேர்ந்தவர் பாபு (வயது 30). இவரது மனைவி சம்பூர்ணம் (22). தம்பதி இருவரும் கோவையில் கூலி வேலை செய்து வந்தனர்.  கோவில் திருவிழாவையொட்டி அவர்கள் ஊருக்கு வந்து இருந்தனர். இந்த நிலையில் சம்பூர்ணம் அங்குள்ள கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதைபார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டனர். பின்னர் சம்பூர்ணம் உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், எனது கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர் தன்னை அடித்து துன்புறுத்தியதுடன், வரதட்சணை கேட்டு துன்புறுத்தினர். இதனால் தான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியமணி விசாரணை நடத்தி கணவர் பாபு, மாமனார், மாமியார் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Next Story