எலவனூர் வீரகொண்வ நாயக்கர், வீரபொம்மக்கள் கோவில் திருவிழா
எலவனூர் வீரகொண்வ நாயக்கர், வீரபொம்மக்கள் கோவில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
க.பரமத்தி,
திருவிழா
கரூர் மாவட்டம், சின்ன தாராபுரம் அருகே உள்ள எலவனூரில் வீரகொண்டவ நாயக்கர், வீர பொம்மக்காள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 3 வருடமாக கொரானாவை முன்னிட்டு திருவிழா நடைபெறவில்லை.
2 வருடத்திற்கு முன்பு புதிதாக கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. அன்றிலிருந்து தினமும் இரவு உறுப்பி, மேளத்துடன் சிறப்பு பூஜை நடந்தது.
கத்தி ஏறுதல் நிகழ்ச்சி
கடந்த 6-ந்தேதி காலை கொடுமுடி ஆற்றுக்கு சென்று காவிரி தீர்த்தம், கரும்பு வாங்கி வந்து எலவனூர் கோவில் வீட்டில் வைத்தனர். அன்று மாலை கோவில் வீட்டிலிருந்து பூசாரிகள் இருவருக்கும் அருள் வந்து கத்தி ஏறுதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து தீர்த்தம், கோவில் குடையுடன் கோவிலுக்கு வந்தனர். இவர்களுடன் பெண்கள் அனைவரும் கொழுக்கட்டை கரும்புடன் பின் தொடர்ந்து வந்தனர். இவர்களுக்கு முன்பு ஆண்கள் தேவராட்டம் ஆடிக்கொண்டே கோவிலுக்கு வந்தனர்.
சேர்வை ஆட்டம்
இரவு கொடுமுடியில் இருந்து கொண்டுவந்த தீர்த்தத்தை வைத்து இரண்டு சாமிகளுக்கும் சிறப்பு பூஜை நடந்தது. அன்று இரவு பெண்கள் கோவில் முன்பு கும்மியாட்டம் ஆடினர். கடந்த 7-ந்தேதி மாலை கோவில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து சிறப்பு பூஜை நடந்தது. இரவு வள்ளி திருமணம் நாடகம் நடந்தது.
தொடர்ந்து கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்று மாலை சேர்வை ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் நடந்தது. பின்னர் கோவில் கொடையை கோவிலில் இருந்து கோவில் வீட்டிற்கு கொண்டு வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் நாயக்கர் தலைமையில் ஊர் பொதுமக்கள் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story