டிரான்ஸ்பார்மரில் ஆட்ேடா மோதி டிரைவர், 2 மாணவிகள் படுகாயம்


டிரான்ஸ்பார்மரில் ஆட்ேடா மோதி டிரைவர், 2 மாணவிகள் படுகாயம்
x
தினத்தந்தி 9 May 2022 10:25 PM IST (Updated: 9 May 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.புதூர் அருகே பிளஸ்-2 தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய போது டிரான்ஸ்பார்மரில் ஆட்ேடா மோதி டிரைவர், 2 மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

எஸ்.புதூர்,

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுத 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புழுதிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.கரிசல்பட்டியைச் சேர்ந்த 10 மாணவ, மாணவிகள் வாடகை ஆட்டோ மூலமாக புழுதிபட்டி பள்ளியில் தேர்வு எழுதி முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். ஆட்டோவை கரிசல்பட்டியை சேர்ந்த நியூசர்புதீன் ஓட்டினார். ஆட்டோ கரிசல்பட்டி ஊருக்குள் நுழைந்த போது திடீெரன்று கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அந்த ஆட்டோ சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மர் மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் நியூசர்புதீன் மற்றும் 2 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயம் அடைந்தனர். உடனே அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக் துவரங்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டனர். ஆட்டோ டிரைவரும், 2 மாணவிகளும் சிகிச்சை பெற்றனர்.



Next Story