உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு


உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 9 May 2022 8:16 PM GMT (Updated: 9 May 2022 8:16 PM GMT)

வத்திராயிருப்பு பகுதியில் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வத்திராயிருப்பு, 
வத்திராயிருப்பு பகுதியில் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 
அதிகாரிகள் ஆய்வு 
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் உள்ள டீக்கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் உள்ள உணவுப்பொருட்கள் திறந்த வெளியில் வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், பொதுமக்கள் மற்றும் வாகன நெருக்கடி அதிகம் உள்ள முத்தாலம்மன் பஜார் பகுதி வழியாக செல்லும் வாகனங்களில் ஏற்படும் புகை மற்றும் தூசிகள் திறந்து இருக்கும் உணவுகளில் படிந்து உணவுப்பொருட்கள் சுகாதாரக்கேடு ஏற்படுவதாக புகார்கள் வந்தன. 
இதையடுத்து வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், பலசரக்கு கடைகள், பேக்கரி ஆகியவற்றில் சாத்தூர் நகர உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மோகன் குமார், வத்திராயிருப்பு, சிவகாசி வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வெங்கடேஸ்வரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 
கடைகளுக்கு அபராதம் 
இந்த ஆய்வுப்பணியில் திறந்தவெளியில் உள்ள உணவுப் பொருட்களை முறையாக பாதுகாத்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். 
அத்துடன் காலாவதியான பொருட்களை கைப்பற்றி அந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர். ஓட்டல்களில் கோழி இறைச்சியில் அதிக கலர் பொடி கலக்கப்பட்டு இருந்ததால் அந்த இறைச்சியினை கைப்பற்றி அழித்தனர். மேலும் கடைகளில் சுமார் 50 கிலோவுக்கு மேல் இருந்த பாலித்தீன் கவர்களை கைப்பற்றி கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.

Next Story