பேரிடர் மேலாண்மை பயிற்சி


பேரிடர் மேலாண்மை பயிற்சி
x
தினத்தந்தி 10 May 2022 6:45 PM GMT (Updated: 2022-05-10T18:07:17+05:30)

மணல்மேடு அரசு கலை அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.

மணல்மேடு:-

மணல்மேடு அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் நாகை மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி கல்லூரியில் நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.  செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் தாமரைக்கண்ணன் வரவேற்றார். செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல், பயிற்சியை தொடங்கி வைத்தார். செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியன், மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் கல்லூரி பேராசிரியர்கள் சுந்தரமூர்த்தி, கார்முகிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கணிதத்துறை பேராசிரியர் இளங்கோவன் நன்றி கூறினார். 

Next Story