சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பள்ளிகளில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு


சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பள்ளிகளில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆய்வு
x
தினத்தந்தி 10 May 2022 7:00 PM GMT (Updated: 2022-05-10T21:45:12+05:30)

சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பள்ளிகளில் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஆய்வு செய்தார்.

திருவெண்காடு:-

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பெண்கள் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில் இயங்கி வருகிறது. தற்போது இந்த பள்ளிகளில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டிட பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ரூ.18 லட்சத்தில் கழிவறை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் ஆய்வு செய்தார். பின்னர் அவர்  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது கோவில் நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

Next Story