நாமக்கல்லில் ரூ.35 லட்சத்தில் பள்ளி மேம்பாட்டு பணிகள்-நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்


நாமக்கல்லில் ரூ.35 லட்சத்தில் பள்ளி மேம்பாட்டு பணிகள்-நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 10 May 2022 5:51 PM GMT (Updated: 2022-05-10T23:21:30+05:30)

நாமக்கல்லில் ரூ.35 லட்சத்தில் பள்ளி மேம்பாட்டு பணிகளளை மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல்:
நாமக்கல் நகராட்சி அவசர கூட்டம் நேற்று தலைவர் கலாநிதி தலைமையில் நடந்தது. ஆணையாளர் சுதா, துணைத்தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சிக்கு சொந்தமான சின்னமுதலைப்பட்டி தொடக்கப்பள்ளி, கோட்டை உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் குழந்தைகளின் நலன் கருதி சீர்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்), கூடுதல் மேம்பாட்டு பணிகள் ரூ.35 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் செய்ய அனுமதி அளிப்பது. நகராட்சிக்கு உட்பட்ட, 1, 2, 6, 7, 8, 9, 10, 17, 18, 19 வார்டுகள் மற்றும் 20, 21, 22, 23, 24, 25, 26, 36, 37, 38 என மொத்தம் 20 வார்டுகளில், ரூ.30 லட்சம் செலவில் பகிர்மான குழாய்கள், அடிக்குழாய்கள், பம்பிங் மெயின் ஆகியவற்றில் ஏற்படும் பழுதுகளை, சுழற்சி முறையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்புதல் அளிப்பது என்பது உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கொறடா சிவக்குமார் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story