மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
x
தினத்தந்தி 11 May 2022 12:01 AM IST (Updated: 11 May 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் தலைமை தாங்கி, 15 பேருக்கு ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலி, ஊன்றுகோல், முழங்கை தாங்கி, செயலிகள் உடன் கூடிய திறன்பேசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 227 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, 148 நபர்களுக்கு முதல்-அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு, 157 புதிய பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை பதிவு மேற்கொள்ளப்பட்டது. 

முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் அலுவலகப் பணியாளர்கள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story