பஸ், லாரிகளில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்


பஸ், லாரிகளில் ஏர்ஹாரன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 May 2022 6:33 PM GMT (Updated: 10 May 2022 6:33 PM GMT)

திருப்பத்தூர், ஆம்பூரில் பஸ், லாரிகளில் ஏர்ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.கே. காளியப்பன் மற்றும் அலுவலர்கள் திருப்பத்தூர் பஸ் நிலையம், சேலம் மெயின் ரோடு, நாட்டறம்பள்ளி- பெங்களூரு ரோடு ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது 29 பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பொருத்தப்பட்டு இருந்ததை அகற்றினர். மீண்டும் பஸ்களில் ஏர்ஹாரன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுப்பதோடு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

வாகனங்களுக்கு இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளார்களா, அதிக பாரம் ஏற்றி செல்கிறார்களா, சீட்பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணிந்து வருகிறார்கள் என ஆய்வு செய்தனர். அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன் பொருத்தி வந்த 15 லாரிகளில் ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்தனர். அதேபோன்று 15 லாரி, பஸ்களுக்கு கலெக்டர் உத்தரவின்பேரில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் ஆம்பூரில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது விதிமுறைகளுக்கு முரணாக அரசு, தனியார் பஸ்கள் மற்றும் இதர கனரக வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஹாரன்கள் அகற்றப்பட்டன. இதுபோன்ற ஏர் ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது என வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்தனர்.

Next Story