70 அடி கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு


70 அடி கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 10 May 2022 7:24 PM GMT (Updated: 2022-05-11T00:54:04+05:30)

70 அடி கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

நொய்யல், 
புன்னம் சத்திரம் அருகே உள்ள குட்டகடை ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (55), விவசாயி. இவரது தோட்டத்தில் பசுமாடுகள் மேய்ந்து கொண்டு இருந்தன. அப்போது ஒரு பசுமாடு அருகே உள்ள 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெரியசாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பசுமாட்டை மீட்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பசுமாட்டை கயிற்றின் மூலம் மேலே இழுத்து உயிருடன் மீட்டனர்.

Next Story