மாவட்ட செய்திகள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் + "||" + Offering

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம்
ஸ்ரீரங்கம், மே, 11-
தமிழ்நாடு முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 23-ந் தேதி முதல் நாள் முழுவதும் அதிரசம், லட்டு, மைசூர்பாகு, தேன் குழல் ஆகியவற்றில் ஒன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திங்கள் முதல் வியாழன் வரை சுமார் 4 ஆயிரம்பேருக்கும், திருவிழா காலங்கள் மற்றும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 8 ஆயிரம் பக்தர்களுக்கும் பிரசாதமாகவழங்கப்பட்டுவருகிறது. இத்திட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று திருச்சியை சேர்ந்த பக்தர் ஒருவர் சுமார் 5 ஆயிரம் லட்டுகளை நன்கொடையாக ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில்  பக்தர்களுக்கு வழங்கினார்.


தொடர்புடைய செய்திகள்

1. வடபழனி முருகன் கோவிலில் ரூ.15 லட்சம் தரமற்ற லட்டு, முறுக்கு பிரசாதம் பறிமுதல்
வடபழனி முருகன் கோவிலில் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ரூ.15 லட்சம் லட்டு, முறுக்கு உள்ளிட்ட பிரசாதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.