பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 10 May 2022 8:00 PM GMT (Updated: 2022-05-11T01:30:35+05:30)

விருதுநகர் அருகே பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்து சென்றனர்.

விருதுநகர், 
விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் சூலக்கரையில் உள்ள தனியார் நூற்புஆலைக்கு எதிரே மனோகரன் என்பவர் சாலையோர உணவகம் வைத்துள்ளார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் அவரது மனைவி கோமதி (வயது 39) உணவகத்தை திறந்து கொண்டிருந்த போது 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் கோமதியிடம் 3 பேருக்கு தேவையான பார்சல்டீ கொடுக்குமாறு கேட்டனர். கோமதி டீ போட்டுக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தவரிடம் சென்று கொடுத்த போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் கோமதியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டனர். இதுபற்றி கோமதி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Next Story