புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றிய புதிய தமிழகம் கட்சியினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் குணா தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் அருண்குமார் கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் திண்டுக்கல் மாவட்ட புதிய தமிழகம் நிர்வாகிகள் மீது போடப்பட்ட குண்டா் தடுப்பு சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரியும், ஜனநாயக குரல்வளையை கருத்தரங்கத்தில் நெரித்து தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் தொண்டர்கள் போராட காரணமான ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story