24,491 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 ேதர்வு எழுதினர்


24,491 மாணவ- மாணவிகள் பிளஸ்-1 ேதர்வு எழுதினர்
x
தினத்தந்தி 10 May 2022 8:03 PM GMT (Updated: 2022-05-11T01:33:02+05:30)

விருதுநகர் மாவட்டத்தில் நடந்த பிளஸ்-1 ேதர்வினை 24,491 மாணவ- மாணவிகள் எழுதினர்

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் நடந்த பிளஸ்-1 ேதர்வினை 24,491 மாணவ- மாணவிகள் எழுதினர்
பிளஸ்-1 தேர்வு 
தமிழகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக பிளஸ்-1 தேர்வு நடைபெறாத நிலையில் 2021-2022-ம் கல்வி ஆண்டிற்கான பிளஸ்-1 பொது தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. இதையடுத்து நேற்று பிளஸ்-1 தேர்வு தொடங்கியது.
 இத்தேர்வு வருகிற 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 98 மையங்களில் 11, 848 மாணவர்களும், 12,643 மாணவிகளும் ஆக மொத்தம் 24, 491 பேர் தேர்வு எழுதினர். 244 தனித்தேர்வர்களும், 98 மாற்றுத்திறனாளிகளும் தேர்வு எழுதினர்.
கண்காணிப்பு பணி
பிளஸ்-1 பொதுத் தேர்வு கண்காணிப்பு பணியில் 1,685 பேர் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இதுதவிர 8 பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளும், தேர்வு மையங்களுக்கான போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டிருந்தது. மேலும் அரசு உத்தரவுப்படி மின்வாரியத்தினர் தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

Next Story