மாவட்ட செய்திகள்

நடமாடும் வாகனம் மூலம் கடைகளுக்கு நேரடியாக சென்று உணவு பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு + "||" + Officers inspect

நடமாடும் வாகனம் மூலம் கடைகளுக்கு நேரடியாக சென்று உணவு பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

நடமாடும் வாகனம் மூலம் கடைகளுக்கு நேரடியாக சென்று உணவு பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு
நடமாடும் வாகனம் மூலம் கடைகளுக்கு நேரடியாக சென்று உணவு பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
காரைக்குடி, 
சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் பிரபாவதி தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மொபைல் புட் லேப் என்ற புதிய நடமாடும் வாகனம் மூலம் காரைக்குடி அம்பேத்கர் சிலை அருகே உள்ள உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் இருந்து கடைகளில் உள்ள பொருட்களின் தரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். தொடர்ந்து உணவகங்கள், டீக்கடைகள், பேக்கரி உள்ளிட்ட பல்வேறு கடைகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள உணவு பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தனர். மேலும் அதில் கெட்டுபோன நிலையில் உள்ள பொருட்களை கண்டறிந்து அந்த கடையின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இந்த ஆய்வு நேற்று முதல் தொடங்கி தொடர்ந்து 3 நாட்கள் வரை நடக்கிறது. இந்த ஆய்வின் போது உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார், உதவியாளர் கருப்பையா மற்றும் ஆய்வக தொழில் நுட்ப வல்லுநர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு
வத்திராயிருப்பு பகுதியில் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
2. கடைகளில் தடை செய்யப்பட்ட மிட்டாய்கள் விற்கப்படுகிறதா?
அருப்புக்கோட்டையில் கடைகளில் தடை செய்யப்பட்ட மிட்டாய்கள் விற்கப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
3. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 26 ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 26 ஆதிதிராவிட, பழங்குடியின மாணவ, மாணவிகள் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
4. பருத்தி செடியில் நோய் தாக்குதல்; அதிகாரிகள் ஆய்வு
பருத்தி செடியில் நோய் தாக்குதல் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
5. சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் பிஏபி வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் ஆய்வு
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் திருட்டை தடுக்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.