மாவட்ட செய்திகள்

பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Milk trader commits suicide by hanging

பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
பாளையங்கோட்டையில் பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
பாளையங்கோட்டையில் பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பால் வியாபாரி
பாளையங்கோட்டை பெருமாள்புரம் ரெயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). பால் வியாபாரி. இவர் நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலெக்டரிடம் தாய் புகார்
இதற்கிடையே மணிகண்டனின் தாய், அம்பை மேலப்பாளையம் கீழரதவீதியை சேர்ந்த மோகனா (55) மற்றும் குடும்பத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
அதில் கூறிஇருப்பதாவது:-
என்னுடைய மூத்த மகன் மணிகண்டன் பாளையங்கோட்டையில் பால் பாக்கெட் மற்றும் உணவு பொருட்கள் வியாபாரம் செய்து வந்தான். மணிகண்டனுக்கும், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சக்திக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் வெற்றி வருண் என்ற மகன் உள்ளான்.
இந்த நிலையில் மருமகளுக்கும், அந்த பகுதியில் குடியிருக்கும் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக என்னிடம் மணிகண்டன் கூறினான். மேலும் அந்த நபரின் பெயரை மருமகள் மார்பில் பச்சை குத்தி இருப்பதாகவும், அதனால் பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாகவும் கூறினான்.
இந்தநிலையில் மணிகண்டன் உடலில் காயம் ஏற்பட்டு தற்கொலை செய்துள்ளான். என்னுடைய மகன் இறப்புக்கு மருமகள் மற்றும் அவருடைய கூட்டாளியும் காரணம் ஆகும். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறிஉள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பாளையங்கோட்டை அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
விழுப்புரத்தில் மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை-சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்
ஜெயங்கொண்டம் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.
4. வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
செங்கோட்டை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.