மைசூரு உயிரியல் பூங்காவில் 3 குட்டிகளை ஈன்ற வெள்ளை புலி


மைசூரு உயிரியல் பூங்காவில் 3 குட்டிகளை ஈன்ற வெள்ளை புலி
x
தினத்தந்தி 10 May 2022 8:34 PM GMT (Updated: 2022-05-11T02:04:58+05:30)

மைசூரு உயிரியல் பூங்காவில் வெள்ளை புலி 3 குட்டிகளை ஈன்றது.

மைசூரு:

மைசூருவில் சாமராஜேந்திரா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி உள்பட ஏராளமான வனவிலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த உயிரியல் பூங்காவில் உள்ள 8 வயதான தாரா என்ற பெண் வெள்ளை புலி தற்போது 3 குட்டிகளை ஈன்றுள்ளது. இதுபற்றி அறிந்த உயிரியல் பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவக்குழுவினர் அந்த 3 குட்டிகளையும் மீட்டு பரிசோதித்தனர். 

அப்போது அவை மூன்றும் ஆரோக்கியாக இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து 3 குட்டிகளையும் தாயுடன் அவர்கள் விட்டுள்ளனர். அந்த குட்டிகளும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கும் விடப்பட்டுள்ளதாக உயிரியல் பூங்கா அதிகாரி தெரிவித்தார். 

Next Story