ஓடையில் பிணமாக கிடந்த விவசாயி


ஓடையில் பிணமாக கிடந்த விவசாயி
x
தினத்தந்தி 11 May 2022 6:37 AM IST (Updated: 11 May 2022 6:37 AM IST)
t-max-icont-min-icon

ஓடையில் விவசாயி பிணமாக கிடந்தார்.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கைக்களநாட்டார் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 70). விவசாயியான இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார். பின்னர் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடிப்பார்த்த போது நேற்று காலை அரசு மரத்துவாரி ஓடையில் அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story