குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் ரத வீதி உலா


குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் ரத வீதி உலா
x
தினத்தந்தி 11 May 2022 4:02 PM IST (Updated: 11 May 2022 4:02 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை மாத கடைசி செவ்வாக்கிழமையையொட்டி ரதவீதி உலா நடந்தது.

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சித்திரை மாத கடைசி செவ்வாக்கிழமையையொட்டி காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. நண்பகல் 2 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு ராக்கால பூஜை நடந்தது. தொடர்ந்து முத்தாரம்மன் ரதம் கோவில் வளாகத்தை சுற்றி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Next Story