மூலனூர் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ70க்கு விற்பனை


மூலனூர் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ70க்கு விற்பனை
x
தினத்தந்தி 11 May 2022 11:41 AM GMT (Updated: 11 May 2022 11:41 AM GMT)

மூலனூர் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ70க்கு விற்பனை

மூலனூரில் பிரதி வாரம் புதன்கிழமை அன்று காய்கறி சந்தை நடைபெறும். இந்த சந்தையில் மூலனூர் சுற்றுவட்டார பகுதிகளான கிளாங்குண்டல், பெரமியம், காளிபாளையம், தூரம்பாடி, கன்னிவாடி உள்ளிட்ட பகுதியில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.  மேலும் இந்த சந்தையில் மளிகை பொருட்கள் விவசாய கருவிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படும். இந்த வாரம் தக்காளி வரத்து குறைந்ததால் ஒரு கிலோ தக்காளி ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது  சந்தையில் விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் கிலோவுக்கு 
 வெங்காயம் ரூ.20, கேரட் ரூ.70, பீன்ஸ் ரூ.90, பீட்ரூட் ரூ.60, கத்தரிக்காய் ரூ.30, முட்டைகோஸ் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.40, பீர்க்கங்காய் ரூ.30,  முள்ளங்கி ரூ.60 அவரை ரூ.100, இஞ்சி ரூ.70,  பாகற்காய் ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது.

Next Story