கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது


கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 11 May 2022 1:52 PM GMT (Updated: 2022-05-11T19:22:09+05:30)

சுரண்டையில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சுரண்டை:

சுரண்டை மற்றும் சுற்றுப்புற பகுதியில் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக சுரண்டை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு பாலமுருகன் மற்றும் போலீசார் சுரண்டை, ஆலடிப்பட்டி குளத்துக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2  பேரை பிடித்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினர். அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில்,  சுரண்டை கோட்டை தெருவைச் சேர்ந்த துரை மகன் அரவிந்த் (வயது 23) மற்றும் 19 வயது நிரம்பிய வாலிபர் என தெரியவந்தது. அவர்களை சோதனையிட்டபோது சுமார் 200 கிராம் அளவில் சிறுசிறு பாக்கெட்டுகளாக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், 2 பேரையும் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.


Next Story