வன அலுவலகத்தில் 300 கிலோ சந்தன மரக்கட்டைகள் திருட்டு
அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள வன அலுவலகத்தில் 300 கிலோ சந்தன மரக்கட்டைகள் திருட்டபட்டுள்ளன.
அவுரங்காபாத்,
அவுரங்காபாத் மாவட்டம் கன்னட் மண்டலம் ஹிவார் கேடா பகுதியில், வனச்சரகத்திற்கு சொந்தமான அலுவலகம் ஒன்று உள்ளது. இந்த அலுவலகத்தில் இருந்த குடோனில் வன அதிகாரி ராகுல் ஷெல்கே ஆய்வு நடத்தினார்.
அங்கு பறிமுதல் செய்யப்பட்டு வைத்திருந்த 300 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள், 6 கிலோ பசை மற்றும் 11 கிலோ எடையுள்ள சந்தன வாசனை திரவியங்கள் போன்றவை திருடப்பட்டு இருந்ததை அறிந்தனர். இதுபற்றி போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தன மரக்கட்டைகளை திருடி சென்ற ஆசாமியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story