சூறாவளி காற்றில் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன


சூறாவளி காற்றில் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன
x
தினத்தந்தி 11 May 2022 3:06 PM GMT (Updated: 2022-05-11T20:36:46+05:30)

கலசபாக்கம் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் 20 கிராமங்களில் மின்சாரம் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கலசபாக்கம்

கலசபாக்கம் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் 20 கிராமங்களில் மின்சாரம் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட லாடவரம், கெங்கநல்லூர், கணேஷபுரம், கோவூர், சீட்டம்பட்டு, அணியாலை, காம்பட்டு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. 

சூறாவளி காற்றால் அப்பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பனை, தென்னை, வாழை மரங்கள் விழுந்து நாசம் அடைந்துள்ளன. விவசாய நிலத்தில் பயிர் செய்யப்பட்டிருந்த நெல், கரும்பு ஆகியவையும் காற்றில் சாய்ந்தது. மேலும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். 

 மாணவர்கள் அவதி 

தற்போது 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருவதால் மாணவர்கள் இரவு நேரத்தில் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் சேதம் அடைந்த மின்கம்பங்களை உடனடியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வேளாண்மைத் துறை அதிகாரிகளும் சேதம் அடைந்த பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story