மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 17-ந் தேதி நடக்கிறது + "||" + Ex servicemen grievance day meeting

தூத்துக்குடியில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 17-ந் தேதி நடக்கிறது

தூத்துக்குடியில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 17-ந் தேதி நடக்கிறது
தூத்துக்குடியில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 17-ந்தேதி நடக்கிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 17-ந் தேதி காலை 11 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனரை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.