இளம்பெண் திடீர் மாயம்


இளம்பெண் திடீர் மாயம்
x
தினத்தந்தி 11 May 2022 9:45 PM IST (Updated: 11 May 2022 9:45 PM IST)
t-max-icont-min-icon

வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற இளம்பெண் திடீர் மாயம்

பண்ருட்டி

பண்ருட்டி எல்.என்.புரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகள் உஷா(வயது 19). சென்னையில் உள்ள பாத்திர கடையில் வேலை பார்த்து வந்த இவர் விடுமுறையில் ஊருக்கு வந்தார். பின்னர் கடந்த 8-ந் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற உஷா சென்னைக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை வெங்கடேசன் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான உஷாவை தேடி வருகின்றனர்.

Next Story