தபால் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தபால் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 4:17 PM GMT (Updated: 2022-05-11T21:47:55+05:30)

தபால் ஊழியர் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாமக்கல்:
அங்கீகரிக்கப்பட்ட ஆஸ்பத்திரி மற்றும் அனைத்து ஆய்வகங்களுக்கும் வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். 2014-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ கட்டணத்தை திருத்தி, உயர் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரைபடி 65 வயது முதல் கூடுதல் ஓய்வூதியம் மற்றும் மருத்துவப்படி ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய தபால் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று நாமக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் மணியாரன் தலைமை தாங்கினார். செயலாளர் ராமசாமி, பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story