தமிழ்புலிகள் கட்சி ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் புலிகள் கட்சியினர் 22 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
நாமக்கல்:-
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியினர் நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் கவர்னரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் செய்த அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் மேற்கு மண்டல பொறுப்பாளர் அறிவுத்தமிழன், மாவட்ட செயலாளர்கள் கார்த்தி, கோபி, வினோத் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை வாகனத்தில் ஏற்றிய போலீசார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story