தூத்துக்குடியில் உயர் மின் அழுத்தம் காரணமாக வீட்டு உபயோக பொருட்கள் திடீர் பழுது


தூத்துக்குடியில் உயர் மின் அழுத்தம் காரணமாக வீட்டு உபயோக  பொருட்கள் திடீர் பழுது
x
தினத்தந்தி 11 May 2022 9:50 PM IST (Updated: 11 May 2022 9:50 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் உயர் மின் அழுத்தம் காரணமாக வீட்டு உபயோக பொருட்கள் திடீர் பழுது ஏற்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் புதன்கிழமை பலத்த காற்று வீசியது. இதனால் மின்சார ஒயர்கள் பல இடங்களில் அறுந்து மின் இணைப்பு பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மின்சார வாரிய ஊழியர்கள் மீண்டும் மின்சார வினியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் கோயில்பிள்ளை நகர் பகுதியில் ஏற்பட்ட உயர் மின்னழுத்தம் காரணமாக வீடுகளில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் பழுதடைந்தன. இதனால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
1 More update

Next Story